உலகிலேயே மிகவும் வயதானவரான ஜப்பானை சேர்ந்த மிசாவ் ஒகாவா இன்று (வியாழக்கிழமை) தனது 117-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இது தொடர்பாக நேற்று கருத்துத் தெரிவித்த அவர், நான் இவ்வளவு நீண்டநாட்கள் உயிருடன் இருந்து சாதனை படைப்பேன் என்று நினைத்ததே இல்லை என்று கூறியுள்ளார்.
2013-ம் ஆண்டு உலகின் மிகவும் வயதான நபர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஒகாவா இடம் பிடித்தார். அவர் 1898-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பிறந்தார். அவருக்கு 1919-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவரது கணவர் 1931-ம் ஆண்டே இறந்துவிட்டார். அவருக்கு 4 பேரன்களும், 6 பேத்திகளும் உள்ளனர்.
சமீபகாலமாக அவரது உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. காது சற்று மந்தமாகியுள்ளது. எனினும் அவர் நன்றாக சாப்பிட்டு வருகிறார். எனவே மேலும் சில ஆண்டுகளுக்கு அவருக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago