2,300 சார்ஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் மாயம்: பிரான்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

By செய்திப்பிரிவு

பிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சேமித்து வைத்திருந்த 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மதிப்புமிக்க பிரான்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்து கூறுகையில், ”பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோப்புக்காக சேமிக்கப்பட்டு வைத்திருந்த 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகளைக் கொண்ட 29 குப்பிகள் எங்கள் நிறுவன கிடங்கிலிருந்து காணாமல் போய்விட்டது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு மருந்து மற்றும் சுகாதார பாதுகாப்புத்துறை ஆணையம் கடந்த நான்கு நாட்களாக குப்பிகளை தேடும் பணியை மேற்கொண்டது. எனினும் குப்பிகளை கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளது.

காணாமல் போன குப்பிகளில் இருந்த சார்ஸ் வைரஸ் கிருமிகள் காலாவதி ஆனவை என்றும், அந்த கிருமிகளால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமிகளை ஆய்வாளர்கள் தவறுதலாக ஆதாரங்களை சமர்பிக்காமலே அழித்திருக்க கூடும் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனம், 1980களில் எச்.ஐ.வி கிருமிகளை தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது என்பது குறிப்பிடதக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

6 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்