எகிப்து விமான நிலையத்தில் 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

By ஏபி

எகிப்து தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில் 2 பயங்கர வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இன்று காலை தெகிரிக் சதுக்கத்திலும் நாட்டுகுண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

எகிப்தில் 183 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று மத்திய கெய்ரோவில் தெகிரிக் சதுக்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பினால் அங்கு யாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து கெய்ரோவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் வாகன நிறுத்தம் உள்ளிட்ட 2 இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டது.

உடனடியாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் 2 குண்டுகளும் செயலிழக்க செய்யப்பட்டன. இது குறித்து விமான நிலைய அதிகாரி கூறும்போது, "இங்கு பார்க்கிங் பகுதிகள் குண்டுகள் எடுக்கப்பட்டன. சக்தி வாய்ந்தவையாக இருந்த அவ்விரண்டும் செயலிழக்க செய்யப்பட்டன" என்றார்.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு முன்பாக கெய்ரோ மத்தியப் பகுதியான தெகிரிக் சதுக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த மின்சார கம்பங்கள் தீ பிடித்து எரிந்தன.

கடந்த 2013-ஆம் ஆண்டு எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மொர்ஸி பதவியிலிருந்து விலகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். எதிர்ப்பாளர்களின் போராட்டத்தின்போது, 13 போலீஸார் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது ஆதரவு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பட்டி உள்ளிட்ட 183 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனையை அளித்து உத்தரவிட்டிருந்தது. ஒரே தீர்ப்பில் 183 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக மிகப் பெரியப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். அவ்வப்போது பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடத்தப்படு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்