படித்த பெண்களே விழிப்புணர்வு இருந்தும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையைத் தவிர்த்து வருவதாக லண்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மார்பகக் கட்டிகளைக் கண்டறிவதில் நோயைத் தடம்காணும் அதிமேல் முறைகள் மற்றும் நோய் பற்றிய அதி-கணிப்புகள் பற்றிய ஆபத்துக்களை அறிந்திருக்கும் பெண்கள், மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள அதிகளவில் ஆர்வம் காட்டுவதில்லை என லண்டனில் இருந்து வெளியாகும் லான்செட் பத்திரிகை நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
மேமோகிராபி என்றழைக்கப்படும் மார்பகக் கட்டிகளைக் கண்டறியும் பரிசோதனை, மார்பகப் புற்றுநோயினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கிறது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சிட்னி பல்கலைக்கழக ஆசிரியரான மெக் கஃபரே ”மேமோகிராபி என்றழைக்கப்படும் மார்பகக் கட்டிகளைக் கண்டறியும் பரிசோதனை, மார்பகப் புற்றுநோயினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கிறது. ஆனால் சாதாரண நோய்களையும் சேர்த்துக் கண்டறிய இயலும் இப்பரிசோதனை குறித்துப் பெரும்பாலான பெண்கள் அறிந்திருப்பதில்லை” என்று கூறினார்.
மேமோகிராபி செய்து கொள்ளும்போது ஒரு பெண்ணின் வாழ்நாள் முழுவதும், நோய்க்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் ஏற்படும் பக்க விளைவுகளே ’அதி-கண்டறிதல் மற்றும் அதி-சிகிச்சை’ என அறியப்படுகிறது. இதனால் சிலர் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் கூட பாதிக்கப்படலாம்.
48 முதல் 50 வயது வரையிலான 879 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். கடந்த இரண்டு வருடங்களாக எந்த மார்புப் பரிசோதனையும் செய்திராத, அவரவர் பரம்பரையில் மார்பகப் புற்றுநோய் இல்லாத பெண்களாய்க் கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
20 ஆண்டுகால இப்பரிசோதனை, பரிசோதனைகள் இல்லாத காலத்துடன் ஒப்பிடப்படும்போது மார்பகப் புற்றினால் ஏற்படும் இறப்பு வீதம் மற்றும் தவறான சிகிச்சை முடிவுகள் ஆகியவற்றைக் குறைத்துள்ளன. ஆனாலும் மேல்-சிகிச்சையைப் பற்றிய மேலே குறிப்பிட்ட போதுமான தகவல்கள் தரப்பட்ட பின்னர் குறிப்பிடத்தக்க சில பெண்களே மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள முன்வந்தனர்.
”இந்த ஆய்வு, மார்பகப் பரிசோதனை குறித்த மேமோகிராம் தங்களுக்குத் தேவையா இல்லையா என்பது குறித்த தெளிவான முடிவுக்கு வரவேண்டிய தார்மீகக் கடமையைப் பெண்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது”என்று மெக் கஃபரே தெரிவித்தார்.
இவ்வாறு லண்டன் மருத்துவ நாளேடான லான்சென்ட் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
21 mins ago
உலகம்
6 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago