இராக்கில் கடந்த 3 நாட்களில் மட்டும் 200-க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்தப்பட்டுள்ளனர். அதோடு, மொசூல் நகரில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் வசம் வைத்துள்ளனர். யாஷிதி இன மக்களை குறிவைத்து வந்த அவர்கள் தற்போது அங்குள்ள கிறிஸ்தவர்களை தொடர்ந்து கடத்தி வருகின்றனர்.
மொசூல் நகரை மீட்கும் முயற்சியில் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 200-க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் கிறிஸ்தவர்களின் புராதான சின்னங்களையும் அவர்கள் அழித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில், 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மெசபடோமிய கால பாரம்பரியச் சின்னங்களை கோடாரிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து நொறுக்கும் வீடியோ காட்சிகளை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 5 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் மொசூல் நகரில் உள்ள பாரம்பரிய அருங்காட்சியகம் சிதைக்கப்படும் அந்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago