200 அகதிகள் கடலில் மூழ்கி பலி

By ஏபி

மத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல்கள் மூழ்கியதில் சுமார் 200 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகள், வளைகுடா நாடுகளில் இருந்து ஆயிரக்கணக் கான அகதிகள் கடல்மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகின்றனர். சட்டவிரோதமாக நுழையும் அவர்களை தடுக்க இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இத்தாலி கடற்படை வீரர்கள் சில நாள்களுக்கு முன்பு மத்திய தரைக் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் தத்தளித்த 9 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஐவரி கோஸ்ட், செனகல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 212 பேர் ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோத மாக குடியேற இரண்டு சிறியரக கப்பல்களில் சென்றுள்ளனர். பலத்த காற்று காரணமாக இரண்டு கப்பல்களும் கடலில் கவிழ்ந்துள்ளன. இந்த விபத்தில் அகதிகள் அனைவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா. அகதிகள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கார்லட்டோ சமி கூறியபோது, இது வரை 9 பேரை மட்டுமே மீட்டுள்ளோம். மீதமுள்ள 203 பேரை கடந்த 4 நாள்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக் கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலிய கடற்படை வீரர்கள் கூறியபோது, அகதிகள் வந்த கப்பல் களில் உயிர் காக்கும் கருவிகள் ஏதுவும் இல்லை. சம்பவ பகுதியில் சுமார் 25 அடி உயரத்துக்கு அலைகள் ஆக்ரோஷமாக எழும்புகின்றன. இதனால் அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் வடக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த சுமார் 3200 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சுமார் 1.7 லட்சம் பேர் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்