கடந்த 1985-ல் வெளியான நேஷன்ல் ஜியாக்ரஃபிக் இதழில் இடம்பெற்று பிரபலமான ஆஃப்கன் பெண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கி பாகிஸ்தான் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக 4 அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கி பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
'ஆப்கன் பெண்' (Afghan Girl) என்று அறியப்பட்டவர் ஷர்பத் குலா. ஆஃப்கனில் 80-களில் ஏற்பட்ட தாக்குதலிம்போது பெற்றோரை இழந்த சிறுமி ஷர்பத் அங்கு அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். 1984-ல் அவரை கண்ட நேஷன்ல் ஜியாக்ரஃபிக் இதழின் புகைப்படக்காரர் ஸ்டீவ் எம்.சி.கர்ரி அவரை புகைப்படம் எடுத்தார். இந்தப் படம் 1985-ல் நேஷன்ல் ஜியாக்ரஃபிக் இதழின் அட்டைப்படமாக வெளியிடப்பட்டது.
ஆஃப்கன் சூழலை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்த அந்த புகைப்படம் மிகவும் பிரபலமானது டாவின்சியின் மோனாலிஸா புகைப்படம் வெளிப்படுத்தும் உணர்வுகளோடு ஒப்பிடப்பட்டு அவரது புகைப்படம் 'ஆஃப்கன் மோனலிஸா' என்றழைக்கப்பட்டது. ஆஃப்கன் முகாமில் வாழ்ந்த அந்த பெண் நாளடைவில் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
அங்கு அவருக்கு திருமணமான நிலையில் தனது பெயரை ஷர்பத் பிபி என்று மாற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஆஃப்கன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறும்போது, "ஷர்பத் பிபி என்றப் பெயரில் பெஷாவர் நகரிலிருந்து தேசிய அடையாள அட்டைக்காக குலா விண்ணப்பித்திருக்கிறார். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் மூலம் அடையாள அட்டை பெறும் திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆஃபாகானியர்கள் முறைகேடான வகையில் அடையாள அட்டை பெற முயற்சித்தனர். அந்த வகையில்தான் ஷர்பத்தும் தேசிய அடையாள அட்டையை பெற்றிருக்கிறார்" என்றார்.
ஷர்பத்துக்கு தேசிய அடையாள அட்டை வழங்கிய பெஷாவரில் உள்ள ஹயாதாபாத் அலுவலக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் பெண்ணுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago