தென் கொரியாவில் விமான நிறுவன ஊழியரை கொத்தடிமை போல நடத்திய அந்த விமான நிறுவன அதிபரின் மகளுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்தவர் சோ யாங் கோ. இவர் ‘கொரியன் ஏர்’ என்ற பெயரில் விமான போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் சோ ஹியூனாஹ்.
கடந்த டிசம்பர் 5-ல் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தென்கொரிய தலைநகர் சியோல் செல்வதற்காக ‘கொரியன் ஏர்’ விமானம் புறப்பட்டது.
அந்த விமானத்தில் சோ ஹியூனாஹ் பயணம் செய்தார். அப்போது விமான பணிப்பெண் ‘ஸ்நாக்ஸ்’ பரிமாறினார். அதை கிண்ணத்தில் வழங்காமல் பாக்கெட்டில் அளித்ததால் ஆத்திர மடைந்த சோ, தலைமை ஊழியரை அழைத்து கடுமையாக கடிந்து கொண்டார்.
மேலும் ஓடுபாதை யில் சிறிது தொலைவு ஓடிய விமானத்தை நிறுத்தி தலைமை ஊழியரை கீழே இறக்கிவிட்டார்.
இதுதொடர்பாக அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, ஊழியரை கொத்தடிமை போல நடத்திய சோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago