ஐ.எஸ். அட்டூழியம்: இராக்கில் 40 அதிகாரிகள் உயிருடன் எரிப்பு

By ஐஏஎன்எஸ்

இராக்கின் அன்பார் மாகாணத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இராக்கின் மேற்கு பகுதியில் உள்ள அன்பார் மாகாணத்தில் சுமார் 30 முதல் 45 அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமான முறையில் எரித்துக் கொன்றதாக தலைமை இராக் பாதுகாப்புத் துறையில் தலைமை கர்னல் காஸிம் அல்-ஒபைதீ தெரிவித்ததாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரித்துக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சன்னிப் பிரிவு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் பெரும்பாலானோர் காவல்துறையையும் இராக் அரசின் சாவா துணை காவல்படையை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த அன்பார் மாகாணத்தில் உள்ள அயீன் அல் ஆசாத் விமானத் தளத்தில் 300க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இராக்கின் பெரும் பகுதிகளில் ஐ.எஸ். ஆக்கிரமித்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கப் படைகள் அங்கு தாக்குதல் நடத்த முகாமிட்டுள்ளனர். அமெரிக்க மற்றும் இராக் படையினரை அச்சுறுத்தும் நோக்கத்தோடு இந்த கொடூரமான செயலை ஐ.எஸ். அரங்கேற்றியுள்ளதாக கருதப்படுகிறது.

இதைத் தவிர சாவா துணை காவல்படை, பாதுகாப்புப் படை வீரர்கள் குடும்பத்தினர் நூற்றுக்கணக்கானோரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது வசத்தில் வைத்துள்ளதாகவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வருவதாக கர்னல் காஸிம் அல்-ஒபைதீ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்