இராக் தலைநகர் பாக்தாதில் நேற்று நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 37 பேர் உயிரிழந்தனர். 86 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாக்தாதில் உள்ள முக்கிய சந்தைப் பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறியதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய பாக்தாதின் ஷோர்ஜா சந்தையில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் அபு சீர் சந்தைப் பகுதியில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர். ஒட்டுமொத்தமாக 37 பேர் உயிரிழந்தனர். 86 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள தால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகளே தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தலைநகர் பாக்தாதில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். அவர்களை குறிவைத்து சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிர வாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago