சமீபத்தில் நிகழ்ந்த டிரான்ஸ் ஏசியா விமான விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு பயணிகளின் குடும்பத்துக்கும் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தைவான் நாட்டைச் சேர்ந்த டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 5 விமானப் பணியாளர்கள் உட்பட 58 பேர் பயணித்தனர். அவர்களில் இதுவரை 42 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். மாயமான இதர பயணிகளின் சடலங்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு பயணி யின் குடும்பத்துக்கும் 4 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.2 கோடி) இழப்பீடாக வழங்க டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத் தைச் சேர்ந்த செய்தித் தொடர் பாளர் ஒருவர் கூறும்போது, "விபத்தில் உயிரிழந்த குடும்பத் தினரின் சோகத்தை எங்களால் உணர முடிகிறது. எங்களின் இந்த முடிவை அவர்களில் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். எனினும், அவர்களைச் சம்மதிக்க வைக்க எங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
இந்த விபத்துக்குப் பிறகு தைவான் நாட்டின் விமானப் போக்குவரத்து நிர்வாகம், டிரான்ஸ் ஏசியா நிறுவனத்தின் 71 விமானிகளை விமான இயக்கம் தொடர்பான வாய்மொழித் தேர் வுக்கு உட்படுத்தியது. அந்தத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளி யிடப்பட உள்ளன. அதில் தோல்வி யடைபவர்களுக்குத் திரும்பவும் ஒரு மாத கால பயிற்சி அளிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago