டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜெர்மனியின் பிரமாண்ட திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பத்திரிகை அலுவலகம், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகனில் நேற்றுமுன்தினம் ஒரு தீவிரவாதி இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தினார். இதில் ஒரு யூதர் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய தீவிரவாதியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளில் மேலும் பல்வேறு தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளன.
இந்நிலையில் ஜெர்மனியின் ப்ரௌன்ஷ்விக் நகரில் நேற்று பிரமாண்ட உள்ளூர் திருவிழா கொண்டாடப்பட இருந்தது. இந்த விழாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்ததிட்டமிட்டுள்ளனர் என்று உளவுத் துறை எச்சரித்தது. எனவே கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago