இந்தியா அமெரிக்கா இடையி லான நல்லுறவு, பரஸ்பர மரியாதை அடிப்படையிலானது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். பிரபல இந்திய பத்திரிகைக்கு ஒபாமா பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் உள்ள எங்கள் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளுடன் பரஸ்பர மரியாதை அடிப்படையிலேயே அமெரிக்கா உறவு கொண்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படை யிலேயே இந்தியாவுடன் நல்லுறவு பேண அமெரிக்கா விரும்புகிறது.
இரு நாடுகள் இடையே வரலாறும் பாரம்பரியங்களும் மாறுபட்டிருக்கலாம். என்றாலும் எங்களின் வலிமையை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதுவே எங் களை நல்லுறவுக்கு இட்டுவந்தது. நாங்கள் இருவரும் இணைந்து செயல்படும்போது, இரு நாடுகளின் பரஸ்பர நலன்களை அங்கீகரிக்கிறோம். இதன் மூலம் இரு நாடுகளும் பாதுகாப்பாக உணர்கிறோம். எங்கள் மக்களுக்கு வேலைகளும், வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகம் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இரு நாடுகளின் ராணுவமும் இணைந்து போர் பயிற்சியில் அதிகம் ஈடுபட்டுள்ளன.
21-ம் நூற்றாண்டின் வலுவான உறவு
நான் அதிபராக பதவியேற்றது முதல், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவதே எனது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. அதிபராக பதவியேற்ற சிறிது காலத்திலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். ஏனெனில் இந்தியா அமெரிக்கா இடையிலான உறவு, 21-ம் நூற்றான்டின் வலுவான உறவாக இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
நாங்கள் இயற்கையான கூட்டாளிகள். உலகின் 2 மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான எங்களின் பலம், குடிமக்களின் அதிகாரம் மற்றும் திறன்கள் அடிப்படையிலானது. இரு நாடுகளும் தொழில்முனைவோர் சமூகங்களை கொண்டுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாங்கள் உலகின் முன்னணி நாடுகளாக இருக்கிறோம்.
உண்மையான சர்வதேச கூட்டாளிகள்
இந்திய பிரதமராக தற்போது பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இது எங்கள் உறவை மேலும் வலுவாக்க எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் உண்மையான சர்வதேச கூட்டாளிகள் என்பதை கடந்த முறை நான் இந்தியா வந்தபோது குறிப்பிட்டேன். இதனாலேயே இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க வருமாறு அழைத்தவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். இந்திய அரசியல் சாசன 65-வது ஆண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றி, உறுதியான வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பாக எனது இந்தியப் பயணம் அமையும் என நம்புகிறேன். இரு நாடுகள் இடையிலான உறவு புதிய சகாப்தம் படைக்கும் என நம்புகிறேன்.
எங்களை நெருங்கிய கூட்டாளியாக அனுசரித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் நான் வலுவான நட்புறவு கொண்டுள்ளேன். இந்தியாவுக்கு 2 முறையாக பயணம் செய்யும் முதல் அமெரிக்க அதிபர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். இம்முறையும் நான் எனது மனைவியுடன் இந்தியா வரவுள்ளேன்.
கருத்து வேறுபாட்டை தீர்க்க முடியும்
இரு நாடுகள் இடையே எல்லா விவகாரங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுவதில்லை. இந்தியா அமெரிக்கா இடையே சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் பரஸ்பர மரியாதை அடிப்படையில் இந்த கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ள முடியும் என நான் நம்புகிறேன்.
மேலும் எத்தகைய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் அதை பின்னுக்குத் தள்ளிவிடும். இவை அனைத்துக்கும் இரு நாடுகளின் தலைவர்கள் மட்டு மின்றி, அரசுகள் இடையேயும் சிறந்த கருத்துப் பரிமாற்றமும் ஒருங் கிணைப்பும் அவசியம். இவ்வாறு ஒபாமா கூறினார்.
பறக்கும் சக்தி வேண்டும்: ஒபாமா ஆசை
தனக்கு ஏதேனும் அற்புத சக்தி கிடைத்தால், அது பறக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். பிரபல வீடியோ வலைதளமான யூடியூப்பில், யூடியூப் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியின்போது, அதிபர் ஒபாமாவிடம் சில இளைஞர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அவை எல்லாவற்றுக்கும் அதிபர் பதிலளித்தார்.
அப்போது, யூடியூப்பின் பிரபல வீடியோ பதிவாளர் பெதனி மோடா எனும் இளம்பெண், "உங்களுக்கு அற்புத சக்தி கிடைக்குமென்றால், என்ன சக்தி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்?" என்று ஒபாமாவிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த அவர், "எனக்கு ஏதேனும் அற்புத சக்தி கிடைத்தால், அது பறக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago