சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் பலி - போலி கரன்சி நோட்டுகளை அள்ளி வீசியதால் விபரீதம்

By ராய்ட்டர்ஸ்

சீனாவில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது கூட்டநெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 48-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

போலி கரன்சி நோட்டுகளை சிலர் கூட்டத்தில் அள்ளி வீசியுள் ளனர். அந்த நோட்டுகளை பொறுக்க கூட்டம் முண்டியடித்த போது இந்த விபரீதம் நேர்ந் துள்ளது.

சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயின் மத்திய பகுதியில் பண்ட் என்ற சுற்றுலா தலம் அமைந்துள்ளது. நதிக்கரை யோரம் அமைந்துள்ள அப்பகுதி யில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசை யாக நடைபெற்று வருகிறது.

2015 புத்தாண்டை வரவேற்க நேற்று நள்ளிரவில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்திருந்தனர். புத்தாண்டு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் சிலர் போலி கரன்சி நோட்டுகளை ஒரு கட்டிடத்தில் இருந்து அள்ளி வீசியுள்ளனர்.

காற்றில் பறந்து சிதறிய அந்த நோட்டுகளை பொறுக்குவதற்காக கூட்டத்தினர் முண்டியடித்தனர். இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 25 பேர் பெண்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவ, மாணவியர் ஆவர்.

மேலும் 48-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் உள்ளூர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உயர் நிலை விசாரணை நடத்த சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்