பாகிஸ்தானின் கவலைகள் அனைத்தும் தங்களையும் பாதிக்கக் கூடியது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் போலிட்பீரோ மூத்த உறுப்பினர் மெங் ஜியாங்சூ தெரிவித்துள்ளார்.
சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது உயர்மட்ட சபையின் உறுப்பினர் மெங் ஜியாங்சூ தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உறவு இரு தனி நாடுகளின் உறவு முறையையும் தாண்டிய ஒன்று.
சீனாவின் நம்பிக்கை மிக்க தோழமை நாடென்றால் பாகிஸ்தானைத்தான் முதலில் கூற முடியும். சீனாவின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாகிஸ்தான் துணை நின்றிருக்கிறது.
அதேப்போல, பாகிஸ்தானின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சீனா துணை நிற்கும். பாகிஸ்தான் மக்கள் மற்றும் அந்த அரசின் பிரச்சினை, சீனாவின் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது" என்றார்.
பாகிஸ்தானின் ராணுவ தளபதி ரச்சேல் ஷெரீப் சீனா சென்றுள்ளார். சீனாவின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்தோடு அவர் அங்கு சென்றதாக குறிப்பிடப்பட்டது.
அவரது இந்தப் பயணத்தில் பாகிஸ்தான் - சீனா இடையே பாதுகாப்பு ரீதியிலான முக்கிய நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, பாதுகாப்பு கொள்கை, பாதுகாப்பு விவகாரங்களில் தகவல் பரிமாற்றம் போன்ற ஒப்பந்தங்களை நீட்டிப்பது குறித்து முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago