மோடி அழைப்பை ஏற்றார் இலங்கை அதிபர் சிறிசேனா: முதலில் இந்தியா வருகிறார்

By மீரா ஸ்ரீனிவாசன்

இலங்கையின் புதிய அதிபரின் முதல் பயணம் இந்தியாவுக்கே இருக்கவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை சிறிசேனா ஏற்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அதிபர் தேர்தல் முடிவு வெளியானது. தேர்தலில் வெற்றியடைந்த மைத்ரிபாலா சிறிசேனாவை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, அதிபரின் முதல் பயணம் இந்தியாவுக்கே இருக்கவேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அடுத்தமாதம் புதுடெல்லிக்கு வருகிறார். அதிபராக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் இது.

மீனவர்கள் விரைவில் விடுவிப்பு:

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜித் சேனரத்னே, இந்திய மீனவர்கள் 15 பேரை விரைவில் விடுதலை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

15 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடிவு எட்டப்பட்டிருந்தாலும், இருப்பினும் படகுகளை திருப்பி அளிப்பது தொடர்பாக அரசு விரைவில் கொள்கை வகுக்கும் என தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுடனான இலங்கை உறவை மேம்படுத்த புதிய அரசு விரும்புவதாகவும் இந்தியாவுடனான நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாவும் அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்