சோலார் டைனமிக்ஸ் செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படத்தை நாசா வெளியிட்டது

By ஐஏஎன்எஸ்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாசா) சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்த சூரியனின் 10 கோடியாவது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சூரியனை கண்காணித்து வரும் சோலார் டைனமிக்ஸ் கண்காணிப்பு செயற்கைக்கோள், அதிநவீன படத் தொகுப்பு (ஏஐஏ) கருவியின் உதவியுடன் கடந்த 19-ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனின் முழு பகுதியையும் 12 விநாடிகளுக்கு ஒரு முறை 8 கோணங்களில் சுழன்றுகொண்டே புகைப்படம் எடுக்கும் வகையில் 4 தொலைநோக்கிகளை ஏஐஏ பயன்படுத்துகிறது.

டைனமிக் செயற்கைக்கோளில் உள்ள ஏஐஏ மற்றும் 2 இதர கருவிகள் ஆகியவை இணைந்து தினமும் 1.5 டெராபைட் தகவல்களை பூமிக்கு அனுப்புகின்றன. இதில் சூரியனின் 57,600 புகைப் படங்களும் அடக்கம். இவை சூரியனில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள், வெடிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2010 பிப்ரவரி 11-ம் தேதி இந்த செயற்கைக்கோளை நாசா விண்ணுக்கு அனுப்பி வைத்தது. அப்போது முதல் பல சுவாரஸ்யமான புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில் 10 கோடியாவது புகைப்படத்தை எடுத்து சரித்திரம் படைத்திருக்கிறது இந்த செயற்கைக் கோள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்