ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தங்களுடைய தொலைக்காட்சி நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ட்விட்டர் கணக்கு ஆகியவற்றை ஹேக் செய்து கடத்தியுள்ளது என்று அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மெரிலேண்டில் உள்ள WBOC-TV இந்தப் புகாரை எழுப்பியுள்ளது. ஹேக் செய்த பிறகு இந்தத் தொலைகாட்சியின் இணையதளப்பக்கம் கறுப்பு வெள்ளையாக மாறி அதில் 'ஐ லவ் யூ ஐஎஸ்ஐஎஸ்’ என்ற வாசகம் இருந்ததாக அந்த தொலைக்காட்சி கூறியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இது நடந்ததாகவும் சிறிது நேரத்தில் இணையதளத்தை வழக்கமான நடைமுறைக்கு மீட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ட்விட்டர் ஹேண்டில் புதன்கிழமையான் இன்று ஹேக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவே தெரிகிறது.
ஹேக்கர்கள் உண்மையில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா அல்லது ஐ.எஸ். அபிமானிகளா என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
பொதுவாக இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைக் கையில் வைத்துக் கொண்டு விளையாடி வரும் குழுவினர் கூட கவனம் பெற ஐ.எஸ். அபிமானிகளாக தங்களைக் காட்டிக் கொள்வதும் நடக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago