பாரீஸில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும் சகோதரர்கள் கவுச்சி (34), செரீப் கவுச்சி (32) இருவரும் கடுமையான சண்டைக்குப் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, சுட்டுக்கொல்லப்பட்ட இருவரின் கூட்டாளிகள் குறித்த விசாரணை மிகத் தீவிரமாக நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையையும் பிரான்ஸ் போலீஸ் முடுக்கிவிட்டுள்ளது.
பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகப்படும் பயங்கரவாதிகளில் இருவரது அடையாளம் தெரிந்த நிலையில், சகோதரர்களான அவ்விருவரும் பாரீஸ் நகரை அடுத்த டார்மார்ட்டின் கோயேல் என்ற இடத்தில் இருந்த கார் ஒன்றை திருடி தப்பித்து சென்றபோது, வான்வழியாக போலீஸார் அவர்களை கண்டுபிடித்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கிடங்கு மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவற்றில் கொண்ட பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர்களை எதிர்த்து போலீஸார் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிணைக் கைதிகளுடன் வெள்ளிக்கிழமை காரில் தப்பித்துச் சென்ற பயங்கரவாதிகளை போலீஸார் துரத்தி நகர் முழுவதிலும் சுற்றி வளைத்தனர். இரு தரப்பும் பாரீஸ் சாலைகளில் சரமாரியாக தாக்குதல் நடத்திச் சென்றதால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவியது. தப்பிக்க முயன்ற பயங்கரவாதிகள் இருவரும் அருகே இருந்த கிடங்கு ஒன்றுக்குள் புகுந்து பொதுமக்களை பிணைக் கைதிகளாக வைத்துக்கொண்டு மிரட்டல் விடுத்தனர்.
பல்பொருள் அங்காடியில் பிணைக் கைதிகளை வைத்துக்கொண்டு வெளியே சுற்றி வளைத்திருந்த போலீஸார் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பல மணி நேரம் மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்த பயங்கரவாதிகள் 4 பிணைக் கைதிகளை சுட்டுக் கொன்றனர்.
போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் கடந்த 3 நாட்களாக பாரீஸ் நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய துப்பாக்கி ஏந்திய 2 நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிணைக் கைதிகளாக இருந்த சிலர் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை பிடிக்கும் ஆபரேஷனில் 2 போலீஸார் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
பத்திரிகை அலுவலக தாக்குதலில் ஈடுப்பட்டதாக சரணடைந்த மற்றொரு நபரிடமிருந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகள் பிடிக்க நடத்திய ஆபரஷன் குறித்த தகவலை பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது.
பல கோணங்களில் விசாரணை
பத்திரிகை அலுவலத்தில் தாக்குதல் நடத்தியதாக சந்தேககிக்கப்படும் இரண்டு சகோதரர்களும் தப்பிச் செல்ல பாரீஸ் நகருக்கு உள்ளிருந்தே பலர் உதவி புரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஹயாத் பொமேதீன் என்ற சந்தேகத்துக்குரிய பெண் ஒருவர் ஆம்தே கோலிப்ளே என்ற மற்றொரு கூட்டாளியோடு சதி செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த இரு நபர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவர்களை தேடும் முயற்சியில் பிரான்ஸ் தீவிரவாத ஒழிப்பு போலீஸார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகளை பிடிக்க உதவியளித்த போலீஸார் அனைவருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹாலேண்டே நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், திவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதோடு பிரச்சினை முடிந்ததாக கருத வேண்டாம் என்றும் அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு தீவிரவாதிகள் தயாராக இருப்பதாகவும் அவர் போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
13 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago