திருமண வீட்டில் ஏவுகணை பாய்ந்து 25 பேர் பலி: ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது அம்பலம்

By ஏஎஃப்பி

ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் ஏவுகணை விழுந்து 25 பேர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்தத் தாக்குதலை நடத்தியது ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

கடந்த 31-ம் தேதி ஹெல்மண்ட் பகுதியில் திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 2 ராக்கெட் ஏவுகணைகள் அடுத்தடுத்து பாய்ந்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 17 பேர் பெண்கள். இந்தத் தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியதாக முதலில் தகவல்கள் வெளியா கின. ஆனால் ஆப்கானிஸ்தான் ராணுவம் தவறுதலாக திருமண வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஹெல்மண்ட் துணை ஆளுநர் முகமது கூறியபோது, இப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் ராணுவ சோதனை சாவடி மீது தாக்குதல் நடத்தினர். அவர்களை குறிவைத்து ராணுவத்தினர் ராக்கெட் ஏவுகணைகளை ஏவினர். அவை தவறுதலாக திருமண வீட்டில் பாய்ந்துவிட்டது என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக ராணுவ கமாண்டர், 4 வீரர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

மேலும்