பிரான்ஸ் நாட்டில் கொஷெர் எனும் யூத சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் பலியானதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள யூதர் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க அந்நாட்டுப் பிரதமர் மானுவேல் வால்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து நாட்டில் உள்ள 700 யூதர் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் ஈடுபட உள்ளனர்.
மேலும், சமீபத்தில் 'சார்லி ஹெப்டோ' பத்திரிகையின் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளில் ஷெரீப் குவாச்சி என்பவன், சூப்பர் மார்க்கெட்டில் தாக்குதல் நடத்திய அமேதி கூலிபாலியைச் சிறையில் சந்தித்த பிறகுதான் அவன் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுச் சிறையில் இருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கைதிகளை எல்லாம் மற்ற கைதிகளிடமிருந்து தனியே பிரித்து வேறு சிறையில் அடைக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய கைதிகள் மற்ற கைதிகளை மூளைச்சலவை செய்வதில் இருந்து தடுக்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் வால்ஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
7 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago