ஐ.எஸ். தீவிரவாதிகள் விதித்த‌ கெடு முடிவு: ஜப்பானில் பதற்றம்

By ஏபி

ஜப்பானியர் ஒருவரை பிணையக் கைதியாகப் பிடித்து வைத் திருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் விதித்த காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்துள்ளது. அதனையொட்டி, அந்த ஜப்பானியரின் நிலைகுறித்து எதுவும் தகவல் இல்லாததால் ஜப்பானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு ஜப்பானியர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந் தனர். அவர்களில் ஒருவரை ஏற்கெனவே கொன்றுவிட்டனர். பின்னர், ஜோர்தான் நாட்டு சிறையில் இருக்கும் தங்கள் சகோதரி சாஜிதா அல் ரிஷவாய் என்பவரை விடுவித்தால் இன்னொரு ஜப்பானியர் விடு விக்கப்படுவார் என்று தீவிரவாதி கள் நிபந்தனை விதித்து காலக் கெடுவும் விதித்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினத்துடன் அந்தக் காலக்கெடு முடிவடைந்துள்ளது.

இதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளதா என்று ஜப்பானிய உயர் அதிகாரி ஒருவரை அணுகிய போது அது குறித்து எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்க வில்லை. இதற்கிடையே, ஜோர்தான் நாட்டு விமானி ஒருவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

அவரை விடுவிக்க, சாஜிதாவை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் ஜோர்தான் அரசிடம் நிபந்தனை விதித்தனர். அதற்கு ஜோர்தான் அரசு, அந்த விமானி உயிருடன் உள்ளார் என்று தீவிரவாதிகள் நிரூபித்தால், சாஜிதாவை விடு விக்க தயாராக உள்ளது என்று தெரிவித்திருந்தது.

ஆனால் நேற்று முன்தினத் துடன் காலக்கெடு முடிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து ஜப்பானில் பதற்றம் நிலவு கிறது. கைதிகள் பரிமாற்றம் குறித்து நல்லதொரு முடிவை ஜப்பானும் ஜோர்தானும் தேர்வு செய்ய வேண்டும் என்று ஜப்பான் பிணைக் கைதியின் குடும்பம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்