சோமாலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் அல் ஷெபாப் தீவிரவாத குழுவின் தலைவர் அந்த அமைப்பிலிருந்து விலகி வன்முறையை கைவிடுவதாக அறிவித்திருக்கிறார். அல் ஷெபாப் உளவுப் பிரிவு தலைவராக செயல்பட்ட அந்த நிர்வாகியின் பெயர் ஜகாரியா இஸ்மாயில் ஹெர்சி.
கடந்த டிசம்பரில் சோமாலியா அதிகாரிகளிடம் சரண் அடைந்த அவர் முதன்முறையாக சமரசத்துக்குத் தயார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கார். இந்தத் தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது. ஹெர்சி தலைக்கு 3 கோடி டாலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அல் காய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல் ஷெபாப் இயக்கத்துடன் எனக்கு இனி தொடர்பு இல்லை. சர்ச்சைகளை தீர்ப்பதற்காக வன்முறையை வழியாக தேர்வு செய்வதை நான் கைவிடுகிறேன். அமைதி வழியிலும் பேச்சுவார்த்தை மூலமும் லட்சியத்தை எட்டுவதே எனது நோக்கம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த அமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் கடந்த ஆண்டு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அல் ஷெபாப் இயக்கத் தலைவர் அகமது கொடேனேவுக்கு ஆதரவாளர்கள் மூலமாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பார் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2012-ல் ஒபாமா நிர்வாகம் குறிவைத்த 7 அல் ஷெபாப் தலைவர்களில் ஒருவர் ஹெர்சி.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago