சிரியாவில் அரசுப் படைகளுக்கும், அல்-காய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மோதலில் கடந்த இருநாட்களில் மட்டும் 200 பேர் உயிரிழந்தனர்.
இட்லிப் மாகாணத்தில் கடந்த இரு நாட்களாக இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து இதுவரை 200 பேர் உயிரிழந்துவிட்டனர். அரசுப் படையினர் இரு முக்கிய இடங்களை தீவிரவாதிகளிடம் இழந்துவிட்டனர்.
சிரியாவில் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் மட்டுமல்லாது வேறு பல தீவிரவாத அமைப்பினரும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய உள்நாட்டுப் போர் இப்போது வரை தொடர்கிறது.
சன்னி முஸ்லிம்கள் அதிகம் உள்ள சிரியாவில், சிறுபான்மையாக உள்ள ஷியா பிரிவைச் சேர்ந்த ஆசாத் அதிபராக உள்ளதே போருக்கு முதல் காரணமாகும். இப்போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்தை எட்டியுள்ளது. சுமார் 1 லட்சம் பேரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago