மதம் மாற மறுத்த குழந்தைகளின் தலையை ஐ.எஸ். கொய்தது: ப்ரிட்டன் பாதிரியார்

By ராய்ட்டர்ஸ்

மதம் மாற மறுத்ததுக்காக 4 கிறிஸ்துவ குழந்தைகளின் தலைகளை ஐ.எஸ். அமைப்பினர் கொய்ததாக பாக்தாதில் பணியாற்றும் பிரிட்டனை சேர்ந்த பாதிரியார் வேதனை தெரிவித்துள்ளார்.

பாக்தாதில் பணியாற்றும் கெனான் ஆண்ட்ரூ வைட் என்று பாதிரியார் இதனை 'தி இண்டிபெண்டெண்ட்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "பாக்தாத் அருகே இயங்கும் ஆர்தோடாக்ஸ் கிறிஸ்துவ கூட்டமைப்பு வளாகத்தை ஐ.எஸ். அமைப்பினர் தங்களது கைவசம் கொண்டு வந்துவிட்டனர்.

அவர்கள் இராக்கிலிருந்து கிறிஸ்துவர்களை வெளியேற்றியும் குழந்தைகளை கொத்துக்கொத்தாக கொல்கின்றனர். சிலரிடம் மதம் மாற கூறுகின்றனர். அதனை மறுப்பவர்களின் குழந்தைகளின் தலையை கொய்கின்றனர். இல்லையேல் குழந்தைகளை இரண்டாக துண்டாக்குகின்றனர். இப்படி படுகொலைகளை செய்து அவர்கள் பிற பகுதிகளுக்கு முன்னேறி கொண்டிருக்கின்றனர்.

எனக்கு தெரிந்த 4 குழந்தைகளை இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்ற அவர்கள் வலியுறுத்தினர். அதனை மறுத்ததால் அவர்களது தலை கொய்யப்பட்டது. குழந்தைகள் அனைவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இங்கிருக்கும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் எங்களது நண்பர்கள். அவர்களால் கூட ஐ.எஸ். நடத்தும் அட்டூழியங்களை ஜீரணிக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு இதே நிலை தான் உள்ளது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

57 mins ago

உலகம்

3 hours ago

உலகம்

4 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்