ஐ.எஸ். இணையதளத்தில் ஜோர்டான் விமானியின் பேட்டி: தீவிரவாதிகள் வெளியிட்டனர்

By ஏபி

தங்களிடம் பிடிபட்ட ஜோர்டான் விமானியின் பேட்டியை ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் தங்களது இணையதள பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா தலைமையில் பல்வேறு நாடுகள் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இராக், சிரியாவில் வான் வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஜோர்டானும் இணைந்துள்ளது.

அந்நாட்டு போர் விமானம் கடந்த வாரம் வடகிழக்கு சிரியாவில் தாக்குதலில் ஈடுபட் டுள்ளது. அதில் விமானி யூசுப் அல்- கசாஸ்ப் (26) மட்டும் இருந்துள்ளார். விமானம் பறக்கும்போது வெளியாகும் வெப்பத்தை கண்காணித்து தாக்கும் ஏவுகணை மூலம் அதனை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் தீவிரவாதிகள் தெரிவித்தனர். ஆனால் விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்துவிட்டது. தீவிரவாதிகள் கூறுவதுபோன்ற நவீன ஆயுதங்கள் எதுவும் அவர்களிடம் கிடையாது என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இராக், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் தாக்குதலில் இது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அந்த விமானியை தீவிரவாதிகள் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த விமானியின் பேட்டியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் இணையதள பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில் விமானியின் பெயர், குடும்பம், வயது, எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதுபோன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு விமானி பதிலளித்துள்ளார்.

இந்த பேட்டி தொடர்பாக பதிலளிக்க ஜோர்டான் அரசுத் தரப்பு மறுத்துவிட்டது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

18 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்