பாக். ராணுவ குண்டு வீச்சில் 57 தலிபான் தீவிரவாதிகள் பலி: பெஷாவர் தாக்குதலுக்கு பதிலடி

By செய்திப்பிரிவு

கைபர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான் வழி தாக்குதலில் 57 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பெஷாவரில் ராணுவம் நடத் திய பள்ளியில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் 132 பள்ளி மாணவர்கள் உள்பட 148 பேரை சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக ராணுவம் இத்தாக்குதலை நடத்தி யுள்ளது.

பெஷாவர் தாக்குதலை அடுத்து தலிபான் தீவிரவாதிகளை வேட்டை யாடும் நடவடிக்கையை பாகிஸ் தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கைபர் பழங்குடியின பகுதியில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை பயிற்சிமுகாம் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்துபாகிஸ்தான் விமானப் படை அப்பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. போர் விமானங்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளின் மறைவிடங் களை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசின. இதில் 57 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதல் மேலும் தீவிரப் படுத்தப்படும். தலிபான்களை முற்றிலுமாக ஒழிக்காமல் ராணுவம் ஓயாது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை ஒரு வாரத்தில் ஒடுக்க தேசிய திட்டம் ஒன்றை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள எல்லைப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் முற்றிலு மாக ஒடுக்கப்படும் என்று ஷெரீப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தங்கள் குடும்பத்தினரும், குழந்தைகளும் உயிரிழந்தனர். அந்த வேதனையை ராணுவத்தினர் உணர வேண்டும் என்பதற்காகவே ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்