ஆஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் 8 குழந்தைகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் தாயாரை கைது செய்துள்ளதாக போலீஸார் நேற்று கூறினர்.
குயின்ஸ்லாந்து மாநிலம், கெய்ர்ன்ஸ் நகரின், மனூரா புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து காவல் துறையினருக்கு நேற்று முன்தினம் அவசர அழைப்பு வந்தது. காவலர்கள் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு எட்டுக் குழந் தைகள் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் 37 வயது பெண் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இந்தப் பெண்ணின் 20 வயது மகன் வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, குழந்தைகள் இறந்து கிடப்பது தெரியவந்தது.
கொல்லப்பட்ட 8 குழந்தைகளில் 7 குழந்தைகளுக்கு, காயங்களுடன் கிடந்த பெண்தான் தாய் என்றும் மற்றொரு குழந்தை உறவினரின் குழந்தை என்றும் போலீஸார் கூறினர்.
சம்பவ வீட்டில் இருந்து கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தக் குழந்தைகளை கொலை செய்தது, அந்தப் பெண்தான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் நேற்று கூறினர். தற்போது அந்தப் பெண் கெய்ர்ன்ஸ் முகாம் மருத்துவ மனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை செய்யப்பட்டவற்றில் 4 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள். பெண் குழந்தைகள் 2, 11, 12, 14 வயதுடையவை. ஆண் குழந்தைகள் 5, 6, 8, ,9 வயது டையவை. சம்பிரதாய நடைமுறை களை காரணமாக கூறி, சம்பவம் நடந்த குடும்பம் பற்றிய விவரங்களையோ, கொலையான குழந்தைகளின் பெயரையோ போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
25 mins ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago