அமெரிக்க பிணைக் கைதி லூக் சோமர்ஸை கொலை செய்வோம் என்று அல்-காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யேமன் நாட்டில் பத்திரிகை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த லூக் சோமர்ஸ் கடந்த 2013 செப்டம்பரில் அல்-காய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். கடந்த ஓராண்டாக அவர் பிணைக்கைதியாக உள்ளார்.
இந்நிலையில் அல்-காய்தா நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களது கோரிக்கைகள் குறித்து அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளோம், அவற்றை 3 நாள்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் பிணைக்கைதி லூக் சோமர்ஸை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது. அந்த கோரிக்கைகள் என்ன என்பது குறித்து அல்-காய்தா பகிரங்கமாக அறிவிக்கவில்லை. மூன்று நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் லூக் சோமர்ஸ் சிறிதுநேரம் பேசுகிறார். அவர் கூறியிருப்பதாவது:
எனது பெயர் லூக் சோமர்ஸ். எனக்கு 33 வயதாகிறது. நான் பிரிட்டனில் பிறந்தேன். அங்கிருந்து அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளேன். கடந்த ஓராண்டுக்கு முன்பு யேமன் தலைநகர் சனாவில் பணியாற்றியபோது கடத்தப்பட்டேன்.
நான் போபத்தில் இருக்கிறேன். இங்கிருந்து விடுதலையாக வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்காக எதையாவது செய்ய முடியும் என்றால் அதை செய்து என்னை மீட்க வேண்டுகிறேன் என்று அந்த வீடியோவில் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லூக் சோமர்ஸை மீட்க அமெரிக்காவும் பிரிட்டனும் திரைமறைவு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago