தொண்டை எரிச்சலால் அவதிப்படும் அதிபர் ஒபாமாவுக்கு சிகிச்சை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு (53) தொண்டை எரிச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவின் இயக்குநரும் அதிபரின் மருத்துவருமான ரொன்னி எல்.ஜாக்சன் கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக தொண்டை எரிச்சல் இருந்ததால் ஒபாமாவுக்கு, வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் நேற்று ஃபைபர் ஆப்டிக் பரிசோதனை மேற்கொண்டார். இதில் தொண்டையில் மென்மையான திசு வளர்ந்திருந்தது தெரியவந்தது. மேலும் சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் எல்லாம் இயல்பாக இருந்தது.

அமில பின்னோட்டம் (ஆசிட் ரிப்லக்ஸ்) காரணமாக ஏற்பட்ட திசு அழற்சியே ஒபாமாவுக்கு தொண்டை எரிச்சல் ஏற்பட காரணம் என சோதனையில் தெரியவந்தது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவர் தெரிவித்தார். அதிபராகி வெள்ளை மாளிகையில் நுழைவதற்கு முன்பே புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ஒபாமாவுக்கு, கடந்த 6 ஆண்டுகளில் பெரிய அளவில் உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

54 mins ago

உலகம்

2 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

மேலும்