பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முக்கிய மசோதா மீதான விவாத நேரத்தில் அந்நாட்டு எம்.பி. தனது ஐ ஃபோனில் கேண்டி க்ரஷ் விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான ஓய்வூதிய மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. நீண்ட நேரம் நடத்த விவாதத்தின் பெரும் பகுதி நேரத்தில் நிகில் மில்ஸ் என்ற எம்.பி. தனது ஐ ஃபோனில் கேண்டி க்ரஷ் விளையாடி கொண்டிருந்த காட்சி அந்நாட்டின் 'தி சன்' பத்திரிகையில் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்பட்டது. இதனால் அங்கு மிகப் பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய நிகில் மில்ஸ் இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய அம்பர் பள்ளத்தாக்கிலிருந்து நாடாளுமன்ற எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதனால் நாடாளுமன்றத்தின் மேன்மை அறியாமல் நிகில் மில்ஸ் நடந்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம்சாட்டின.
இந்த நிலையில் தான் விவாத நேரத்தில் கேண்டி க்ரஷ் விளையாடியது உண்மை தான் என்று நிகில் மில்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
"நான் கூட்டத்தில் கேண்டி க்ரஷ் விளையாடியது உண்மை. ஆனால் விவாதத்தில் நான் பங்கேற்காமல் இல்லை. பல கேள்விகளை நான் எழுப்பி, விவாதத்தில் ஆக்கத்துடன் பங்கேற்றேன். சில நேரம் மட்டுமே விளையாடினேன். இனி இது போன்ற தவறு ஏற்படமால் பார்த்துகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago