உலக மசாலா: ஆச்சரிய மனிதர்கள்!

தினமும் 8 மணி நேரம், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை செய்கிறார்கள் மனிதச் சிலைகள். லண்டன் தெருக்களில் காணப்படும் இந்த மனிதர்கள், தத்ரூபமாகச் சிலைகளைப் போன்றே காட்சி தருகிறார்கள். உடல் முழுவதும் தங்கம், வெள்ளி நிறங்களில் வண்ணம் பூசிக்கொண்டு வித விதமான முறைகளில் காட்சியளிக்கிறார்கள். சிலை மாதிரி நிற்பதோ, உட்கார்ந்திருப்பதோ கஷ்டம் என்றால், அந்த வழியே செல்பவர்கள் சிலையா, மனிதனா என்று சோதிப்பது அதைவிடக் கஷ்டம்.

சிலர் முகத்தில் ஓங்கிக் குத்திவிடுவதும் உண்டு. சிலரைக் கீழே தள்ளிவிட்டு, எலும்பு முறிந்த நிகழ்ச்சியும் உண்டு. ஆனாலும் நல்ல வருமானம் வருவதால் பலரும் இந்த வேலையை விரும்பிச் செய்கிறார்கள். சுதந்திர தேவி சிலை, விக்டோரியா ராணி, ரோமானிய வீரர்கள் போன்று நிற்கும் சிலை மனிதர்களைக் காண மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். முறையான பயிற்சி எடுத்துக்கொண்டவர்களால் மட்டுமே மனிதச் சிலைகளாக நிற்க முடியும் என்கிறார்கள்.

ஆச்சரிய மனிதர்கள்!

நிலத்தில் மட்டுமில்லை, கடலிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் மிகவும் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்களில் மிதப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது 2,70,000 டன் பிளாஸ்டிக் பொருட்கள். 2012ம் ஆண்டில் மட்டும் 288 மில்லியன் டன் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. கடலில் இருப்பது மிகவும் குறைந்த அளவுதான். ஆனால் அந்த அளவே 5.25 ட்ரில்லியன் என்றால், நிலத்தில் பிளாஸ்டிக் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மனிதர்கள் பிளாஸ்டிக்கை நேரடியாகச் சாப்பிடாவிட்டாலும் கடல்வாழ் உணவுகள், இறைச்சி போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் பிளாஸ்டிக்கால் வெளியாகும் ரசாயனம் உடலுக்குச் சென்றுவிடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று கண்டுபிடிப்பது, உபயோகிக்கத் தடை விதிப்பது மிக அவசியமானது என்கிறார்கள்.

பிளாஸ்டிக் அரக்கன் கிட்டயிருந்து பூமியைக் காப்பாத்தற வேலையை முதல்ல செய்யணும்…

டெட் ரைசிங் டீம் என்ற அமைப்பினர் கிறிஸ்தவ மதத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இறப்புக்காகக் காத்திருக்கும் மனிதர்களிடம் சென்று, பிரார்த்தனை செய்து, பக்திப் பாடல்களைப் பாடுகிறார்கள். அதிகக் கஷ்டப்படாமல் விரைவில் மரணத்தைச் சந்திக்கிறார்கள் அந்த நோயாளிகள். மனித இறப்புக்குக் காரணம் சாத்தான்தான். இறப்பைத் தவிர்க்க இயலாது. ஆனால் அதிகக் கஷ்டப்படாமல், எளிதாக மரணத்தைச் சந்திக்க வைக்க ஜீசஸ் ஒருவரால்தான் முடியும் என்கிறார்கள் இவர்கள். ஆர்வமுள்ள இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். ஜீசஸ் பெயரைச் சொல்லி, இப்படிச் செய்வது சரியல்ல என்று சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது.

உங்க அமைப்பின் பெயரே திகிலா இருக்கே…

ஆப்பிரிக்காவில் பல்வேறு அறிவியல் சோதனைகளுக்காக சிம்பன்ஸிகள் பயன்படுத்தப்படுவதை, விலங்குகள் பாதுகாவலர்கள் எதிர்த்து வந்தனர். அதனால் சோதனைச் சாலைகள் மூடப்பட்டன. அங்கிருந்த சிம்பன்ஸிகளை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியாவின் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுவிட்டனர். குரங்கு தீவு என்று அழைக்கப்படும் அந்த வனப்பகுதியில் இன்று 60 சிம்பன்ஸிகள் மகிழ்ச்சியாக வசித்து வருகின்றன. சிம்பன்ஸியைக் கவனித்துக்கொள்கிறவர்கள், காவலர்கள் தவிர்த்து இங்கே யாரையும் அனுமதிப்பதில்லை. விளையாட்டு, உணவு சேகரிப்பது, மரம் ஏறுவது என்று சிம்பன்ஸிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு பரிசோதனைகளைச் சந்தித்த இரண்டு சிம்பன்ஸிகள், தப்பிப் பிழைத்து இன்றும் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றன.

சிம்பன்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வரவேற்கவேண்டியது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

மேலும்