ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வீட்டில் மர்மமான முறையில் 8 குழந்தைகள் இறந்த கிடந்த வழக்கு தொடர்பாக அக்குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் வீட்டில் மர்மமான முறையில் 8 குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு இறந்த கிடந்தனர். அத்துடன் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் 35 வயதான பெண் ஒருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக தகவல் தெரியவந்ததும் குயின்ஸ்லாந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு விசாரணையை தொடர்ந்தனர். இறந்த கிடந்து குழந்தைகள் 8 பேரும் 18 மாதங்கள் முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
பரிசோதனையில் குழந்தைகள் அனைவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மீட்கப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நகர போலீஸ் அதிகாரி ப்ருனோ ஆஸ்னிக்கார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட குழந்தைகளில் 8 பேரின் தாய்தான் கத்திக்குத்து காயம் அடைந்துள்ள பெண் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்த பெண்ணின் பெயர் மெர்சானி வாரியா என்றும் அவர் தான் தனது 7 குழந்தைகளையும் தனது சகோதரருடைய ஒரு குழந்ததையையும் கத்தியால் குத்தி கொலை செய்து உள்ளது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குழந்தைகள் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago