ஜெர்மனியில் கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட 2-ஆம் உலக போர் கால வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 8,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி ஜெர்மனின் மைன்ஸ் நகரில் நடந்துவரும் கட்டுமானப் பணியிடம் ஒன்றில் 3 மீட்டர் நீளம், சுமார் 1.8 டன் எடைகொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் வெடிகுண்டு புத்துயிருடன் இருப்பதாகவும், மேலும் அது எதிர்பாராத நிலையில் வெடித்தால் மிகப் பெரிய ஆபத்து உண்டாகும் என்றும் எச்சரித்தனர்.
இதனை அடுத்து வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணிக்காக அந்த பகுதியில் உள்ள ரைன் ஏரியின் சுற்றுவட்டாரத்தில் 700 குடும்பங்கள், வணிக நிறுவன ஊழியர்கள், முகாம்களில் தங்கிருந்த அகதிகள் என சுமார் 8,500 பேர் வெளியேற்றப்பட்டனர். குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணியில் சுமார் 1000 பேர் ஈடுப்பட்டனர்.
மைன்ஸ் நகர போலீஸார் திட்டமிட்டபடி அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றிய நிலையில் வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago