அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 58 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் காவல் துறை உயர் அதிகாரி ஷிராஸ் நசீர் கூறும்போது, “கைது செய்யப்பட்ட மீனவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் பயன்படுத்திய 11 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர் என்றார்.
இதேபோல கடந்த நவம்பர் மாதத்திலும் எல்லையை மீறியதாக 61 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது. அரபிக் கடலில் உள்ள சர்வதேச எல்லை தெளிவாக வரையறுக்கப்படாததால் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இருதரப்பிலும் அடிக்கடி நடைபெறுகிறது.
எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கிடையே ராஜாங்க ரீதியிலான உறவு சுமுகமாக இல்லை. இதனால் தண்டனைக் காலம் முடிந்த மீனவர்களை விடுவிப்பதற்கான நடைமுறைகள் காலதாமதமாகி, அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago