உலக மசாலா: கூரையில் ஒட்டப்பந்தய களம்

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் டையான்டை என்ற ஆரம்பப் பள்ளி இருக்கிறது. பல தளங்கள் கொண்ட அந்தப் பள்ளியின் மேல் தளத்தில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் திடலுடன் கூடிய நிலம் கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு உடற்பயிற்சியும் விளையாட்டும் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று விரும்பினோம். அதனால் கிடைத்த இடத்தில் பள்ளியைக் கட்டிவிட்டு, மேல் தளத்தில் ஓடு பாதையை அமைத்துவிட்டோம் என்கிறார்கள் பள்ளியைச் சேர்ந்தவர்கள். பார்ப்பவர்களுக்கு எல்லாம் இது மிகவும் ஆபத்தான விஷயமாகத் தெரிகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் மிகவும் அக்கறையோடு, பாதுகாப்பு விஷயங்களைச் செய்திருக்கிறது.

எதையும் எப்படிப் பயன்படுத்திக்கணும்ங்கிற விஷயத்தைச் சீனர்கள் கிட்ட இருந்து கத்துக்கணும்!

அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தில் ஸ்டீவ் மேயர் என்ற ஸ்டண்ட் கலைஞர் மோட்டார் சைக்கிளோடு பாராக்ளைடரில் பறந்து சாதனை படைத்திருக்கிறார். ஹார்லி டேவிட்சன் புதிய ரக மோட்டார் சைக்கிளின் அறிமுகத்துக்காக இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 313 கிலோ எடை கொண்ட மோட்டார் சைக்கிளை பாராக்ளைடரில் இணைத்து, 500 அடி உயரம் மலையிலிருந்து குதித்தார் ஸ்டீவ்.

வியாபார உத்தி என்னவெல்லாம் செய்ய வைக்குது பாருங்க…

முட்டாள்தனமான காரியங்களைச் செய்வதில் பெண்களை விட ஆண்களே முன்னிலை வகிக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவந்த ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மிகவும் ஆபத்தான, முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டு, உயிரிழந்தவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 282 ஆண்கள், 36 பெண்களின் பெயர்கள் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் ஆல்கஹாலை அதிகமாக ஆண்கள் பயன்படுத்துவதும் இந்த முட்டாள்தனங்களுக்கு ஒரு காரணமாகச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆய்வு ஆயிரம் சொல்லலாம், ஆனால் ஆண்கள் ஒப்புக்குவாங்களா?

இமெயில்களை அனுப்புவதற்கும் வீடியோ பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் இனி ஸ்மார்ட் போன்களின் தேவை இருக்காது. ஒரு பிரேஸ்லெட்டைக் கையில் மாட்டிக்கொண்டால் போதும். கையில் ஸ்க்ரீன் தெரியும். தேவையான விஷயங்களைத் தொட்டு, ஸ்மார்ட் போன்களை இயக்குவது போல இயக்கவேண்டியதுதான். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் இந்த பிரேஸ்லெட் இரண்டு அளவுகளில், பத்து நிறங்களில், 30 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும்.

பயன் இல்லாத ஸ்மார்ட் போன்களை அழிப்பது கஷ்டம்… இந்த பிரேஸ்லெட்டால் குப்பை குறையும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்