இதுவரை பெயர் சூட்டப்படாத, பூமியின் மிக அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க்மனைட் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.
பெர்ஜி பிரிட்க்மேன் என்ற பிரபல புவியியல் அறிஞரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியின் மொத்த அளவில் 38 சதவீதமும், பூமியின் கீழ் அடுக்கில் (மேன்ட்டில்) 70 சதவீதம் வரையிலும் பிரிட்க்மனைட் உள்ளது. இக்கனிமத்தை நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் மிக அழுத்தப் பரிசோதனைகள் செய்வதில் பெர்ஜி பிரிட்க்மேன் முன்னோடியாக விளங்கினார். எனவே இந்தக் கனிமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரிட்க்மனைட் மிகவும் அடர்த்தியான மெக்னீசியம் அயர்ன் சிலிகேட்டால் ஆனது. இதுவரை இக்கனிமம் பெரோவ்ஸ்கைட் என்று அழைக்கப்பட்டு வந்தது. சர்வதேச கனிமவியல் சங்கத்தின் விதிகளின்படி முறையான பெயர் வைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 1879-ல் விழுந்த விண்கல்லில் கிடைத்த மாதிரியை கொண்டு இக்கனிமம் தொடர்பான ஆய்வில் அமெரிக்க புவியியல் அறிஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
50 mins ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago