இந்தியா உடனான உறவை வலுப்படுத்த மலேசிய பிரதமர் நஜீப் துன் ரஸாக் மற்றும் தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் இந்தியா வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆசியான், கிழக்காசிய மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (செவ்வாய்கக்கிழமை) மியான்மர் சென்றார். அப்போது அங்கு வந்த மலேசிய பிரதமர் நஜீப் துன் ரஸாக் மற்றும் தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சானுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். புதிதாக பதவி ஏற்றிருக்கும் இரு நாட்டு பிரதமர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது, நஜீப் ரஸாக் இந்தியா வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
மேலும், நஜீப் ரஸாக்கின் வருகையை எதிர்நோக்கி இருப்பதாகவும், இதன் மூலம் இரு நாட்டு உறவும் வலுப்பெற துணையாக அமைபும் என்றும் மோடி தெரிவித்ததாகவும், அத்துடன், தாய்லாந்தில் நடக்க உள்ள சமஸ்கிருத மாநாட்டில் இந்திய தரப்பில் வெளியுறவு துறை அமைச்சர் பங்கேற்பார் என்றும் மோடி தெரிவித்ததாக வெளியுறவுத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago