தொடர்ந்து 3-வது முறையாக இலங்கை அதிபர் பதவி வகிக்க மகிந்த ராஜபக்ச முயற்சி செய்து வருகிறார். அதனையொட்டி, ஜனவரியில் தேர்தல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 2-வது முறையாக ராஜபக்ச அதிபர் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது. எனினும் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தத் திட்டமிட்டு வருகிறார். அதன் மூலம் தான் 3-வது முறையும் அதிபர் பதவியில் அமர முயற்சித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாத முதல் வாரத்தில் அதிபர் பதவிக்கான வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 7 அல்லது 9ம் தேதிக்கு இடையே ஏதேனும் ஒரு நாள் மட்டும் தேர்தலை நடத்தி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்துவது அதிபர் ராஜபக்சவுக்கு மிகவும் உகந்தது என்று ஜோதிடர்கள் கூறியிருப்பதால், ஜனவரியிலேயே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago