குடியேற்ற பிரச்சினையை சுமுகமாக தீர்க்க அமெரிக்க அதிபர் ஒபாமா முடிவு: ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பயனடைவர்

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்ட வர்கள் குடியேற்ற உரிமை பெறுவதில் உள்ள பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்க அமெரிக்க அதிபர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் தங்கி யுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர் கள் பயனடைய வாய்ப்பு ஏற்பட் டுள்ளது.

அமெரிக்காவில் சட்டபூர்வமாக நிரந்தர குடியேற்ற உரிமை அதாவது கிரீன் கார்டு பெறுவதற்கு மிகவும் கடினமான நடைமுறைகள் உள்ளன. இது அமெரிக்காவில் நிரந்தர குடியேற்ற உரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்க அதிபர் ஒபாமா செயல் திட்டம் ஒன்றை வகுத் துள்ளார். இதன்படி கிரீன் கார்டு பெற விண்ணப்பித்துள்ள வெளிநாடு களைச் சேர்ந்த திறன்மிகுந்த ஊழி யர்களுக்கு முதல்கட்டமாக நிரந்த குடியேற்ற உரிமை வழங்கப் படவுள்ளது.

அதேபோல எச்1பி விசா பெற்று நீண்டகாலமாக அமெரிக்காவில் பணியாற்றும் தம்பதிகளுக்கும் நிரந்தர குடியேற்ற உரிமை அளிக் கப்பட இருக்கிறது. இதற்காக அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

ஒபாமா அரசின் இந்த முடிவால் அமெரிக்காவில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட சுமார் 50 லட்சம் பேர் வரை பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரீன் கார்டு பெறுவதன் மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் தாங்கள் விருப்பும் வரை அமெரிக்காவில் சட்டபூர்வமாக தங்கியிருப்பது, வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறுவது உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை பெற முடியும்.

அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், பொறியியல் உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா உட்பட பல்வேறு நாடு களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.

அவர்கள் அங்கு 5 ஆண்டு களுக்கு மேல் குடியிருந்த போதி லும், அவர்களுக்கு இன்னும் நிரந்தர குடியேற்ற உரிமை வழங்கப் படவில்லை. எனவே அவர்கள் சட்டவிரோதமாக குடியேறிய வர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க குடியரசு கட்சி உறுப்பினர் கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதால், தனது அதிகார வரம்புக்கு உட்பட்டு இந்த சட்டத்தில் திருத்தம் மேற் கொண்டிருப்பதாக, ஒபாமா தெரிவித்துள்ளார். பணி, தொழில் ரீதியாக அமெரிக்காவில் வசிப்பவர் களுக்கும் சில சலுகைகளையும் அவர் அறிவித்தார்.

இவ்வாறு தொடர்ந்து சட்ட விரோதமாக குடியேறியவர்க ளுக்கு நிரந்தர குடியுரிமை அளித் தால், 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் வெள்ளையர்கள் சிறுபான்மை இனமாக மாறி விடுவார்கள். படிப்பறிவு இல்லாத, திறமையற்ற, ஆங்கிலம் தெரியாத வெளிநாட்டினர் அமெரிக்காவில் அதிகமாகிவிடுவார்கள். இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பது குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

மேலும்