வடகொரியா மீதான பொருளாதாரத் தடையால் எந்த பலனும் ஏற்படாது: சீனா

By ஏஎஃப்பி

வடகொரியாவுடன் தொடர்புடைய சீன நிறுவனங்களை இலக்காகக் கொண்ட அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஒரு பயனும் ஏற்பட போவதில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது ஐ. நா. பாதுகாப்பு சபை உதவியுடன் புதிய பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது.

ஆனால் தற்போது அமெரிக்கவின் இந்த பொருளாதாரத் தடையால் வடகொரியாவுடன் தொடர்பு வைத்து கொண்ட சீன நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை வடகொரியா விவகாரத்தில் முடிவு ஏற்பட எந்த உதவியும் செய்ய போவதில்லை. அத்துடன் அமெரிக்காவுடன் சீனா கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை ஒத்துழைப்புக்கும் இது உதவாது.

மேலும் வடகொரிய பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவினாலும், அங்கு அமைதி ஏற்படும் பல தரப்புகளின் முயற்சிக்கு நன்றி என்றார்.எதிர்காலத்தில் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டீல்லர்சன் கூறியுள்ளதை நினைவு படுத்துக்கிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்