ஃப்ளோரிடா துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி பலி; 3 பேர் காயம்

By ஏபி

அமெரிக்காவின் மத்திய ஃப்ளோரிடா நகரின் கிஸிம்மி பகுதியில், சந்தேகத்துக்குரிய நபர்களைச் சோதனையிட்டுக் கொண்டிருந்த போது, காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்; மற்றொருவர் காயமடைந்தார்.

இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 நபர்கள் தற்போது விசாரணை வளையத்தில் உள்ளதாகவும், 4-வது நபர் தேடப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஃப்ளோரிடாவில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறையினர் சிலர் காயமடைந்தனர்.

கிஸிம்பி சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், "கிஸிம்மி காவல்துறை அதிகாரிகளான சாம் ஹாவர்ட் மற்றும் மேத்யூ பாக்ஸ்டர் ஆகியோர் போதைப் பொருள் சம்பந்தமான நபர்களைப் பிடிக்கச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினர் சந்தேகத்துக்கு உரிய 3 நபர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியில் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாக்ஸ்டர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஹாவர்ட் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் இருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரையும், மற்றொரு தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்