நியூஸி. கடற்கரையில் ஒதுங்கிய 60 திமிங்கலங்கள்: கடலுக்கு அனுப்பப்பட்ட பின் இறந்து கரை ஒதுங்கியதால் வேதனை

By ஏஎஃப்பி

நியூசிலாந்தின் ப்ளென்டி விரிகுடாவில் கரை ஒதுங்கிய சுமார் 60 திமிங்கலங்கள், மீண்டும் கடலுக்குள் சென்று கொண்டுவிடும்போது அதில் 14 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

நியூசிலாந்தின் ப்ளென்டி விரிகுடா பகுதியில் திங்கட்கிழமை அன்று சுமார் 60 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதில் 36 திமிங்கலங்கள் மறு நாளே உயிரிழந்தன.

இதனை அடுத்து திமிங்கலங்களை கடலுக்குள் சென்றுவிட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்தனர். அவர்களால் 22 திமிங்கலங்கள் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், 14 திமிங்கலங்கள் கரையிலேயே உயிரிழந்தன. ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்பட்ட மற்ற திமிங்கலங்கள் அனைத்தும் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனால் அங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

ஒஹிவா துறைமுகப் பகுதியில் கரை ஒதுங்கிய இந்தத் திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு போய்விடும் பணியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஈடுபட்டனர். சுமார் 40 திமிங்கலங்களை உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் சேர்த்தனர். இதில், சில திமிங்கலங்கள் உயிரிழந்தன. இதுமட்டுமின்றி கடலில் விடப்பட்ட திமிங்கலங்களில் 22 திமிங்கலங்கள் மீண்டும் கரை ஒதுங்கின.

தற்போது மீதம் உள்ள சில திமிங்கலங்களும் உடல் உபாதைகளோடு காணப்படுவதால், ஆர்வலர்கள் சோகமடைந்துள்ளனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் பைலட் வகை திமிங்கல வகையைச் சார்ந்தது ஆகும்.

முன்னதாக கடந்த 1918-ஆம் ஆண்டும் இதுபோல இந்த வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாக கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் தன்னார்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்