வடகொரியாவின் செயலை இனியும் பொறுத்து கொள்ள முடியாது: ஜப்பான்

By ஏஎஃப்பி

வடகொரியாவின் நடவடிக்கையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அந்நாட்டின் ராணுவத் தளவாடப் பகுதியான குவாம் தீவை தாக்க வல்ல ஏவுகணை சோதனையை நடத்த, வடகொரியா திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’’பசிபிக் பகுதியில் உள்ள அமெரிக்காவின் குவாம் பகுதியை தாக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டங்களைக் கவனமாகப் பரிசோதித்து வருகிறோம்’’ என்று வடகொரியா கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “வடகொரியா அமெரிக்காவை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது. இல்லை என்றால் அவர்கள் இதுவரை இந்த உலகம் காணாத விளைவைச் சந்திப்பார்கள்”என்று எச்சரித்தார்.

ஆனால் ட்ரம்பின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவின் குவாம் பகுதியை தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கை குறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்போது,”வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் அதன் பிராந்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

எங்களால் வடகொரியாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பொறுத்து கொள்ள முடியாது. ஜப்பான் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

23 hours ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்