ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்துக: வடகொரியாவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

By ஏஎஃப்பி

வடகொரியா அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. மேலும் குவாம் தீவைப் பாதுகாக்க நாங்கள் தயராக இருக்கிறோம்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "வடகொரியாவின் ஏவுகணை எதிர்க்க வல்ல அமெரிக்கப் படைகள் பசிபிக் தீவுப் பகுதிகளை சுற்றிலும் நிற்க வைக்கப்பட்டுள்ளன. வடகொரியா அதன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். குவாம் தீவைப் பாதுகாக்கத் தயராக இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும், கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி நிலவுதல் குறித்து இருவரும் பேசியதாக வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐப்பான், சீனா எச்சரிக்கை

வடகொரியா இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முன்னதாக அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்காவும், தென்கொரியாவும் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

வடகொரியாவுக்கு எதிரான இப்போர் பயிற்சிகள் ஆகஸ்ட் 21 - 31 வரை நடைபெறவுள்ளதாகவும் இதில் 10,000க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினருடன் தென் கொரிய படைகள் இணைந்து போர் ஓத்திகையில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் இரு நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 hours ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்