பாகிஸ்தானின் வடமேற்கில் பழங்குடியினர் வசிக்கும் பகுதி யில் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதலில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கைபர் மாவட்டம் பரா நகரில் உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கூட்டு ராணுவப்படை பதில் தாக்குதல் நடத்தியது. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர்-இ-இஸ்லாம் மற்றும் தெரீக்-ஐ-தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது” என்றார்.
கராச்சி விமான நிலைய தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை 1,100 தீவிரவாதிகளும் 100 வீரர்களும் பலியாகி உள்ளனர். இதையடுத்து அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கைபர் பகுதிக்கு புலம் பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago