கொழுப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உள்ள மக்களுக்கு ஆரோக்கியமற்றதாக உள்ளது என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க சுகாதார அதிகாரிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொண்டு கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஐநா பரிந்துரைத்ததோடு, உலக அளவிலும் இது ஒரு அளவுகோலாக பரிந்துரைக்கப்பட்டதால் ஏழை நாடுகள் பாதிக்கப்படும் என்றும் இங்கு மக்கள் ஆரோக்கியம் குறைபாடுடையதாக மாறிவிடும் என்றும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏழை நாட்டு மக்கள் கொழுப்பு உணவை தவிர்த்தால் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உருளைக்கிழங்குகள், அரிசி, ரொட்டி ஆகியவற்றை தவிர்க்க வேண்டி வரும் காய்கறிகள், பழங்கள் இவர்களுக்கு மிகவும் செலவுபிடிக்கும் உருப்படிகளாகும்.
கொழுப்பு குறைவான உணவுகளை பரிந்துரைப்பதற்கான தற்போதைய கவனம், ஏழைநாடுகளில் கார்போஹைட்ரேட்ஸ் எடுத்துக் கொள்வதில் கையை வைப்பதாகும், இதனால் இந்நாடுகளில் ஆரோக்கியம் மோசமடையும், என்று இந்த ஆய்வின் தலைவரும் கனடா, மெக்மாஸ்டர் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளருமான மாஷித் தேகன் எச்சரித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கு உறுதுணை ஆய்வு ஒன்று தி லான்செட்டில் வெளியாகியுள்ளது., அதில் பணக்கார நாட்டு மக்களுக்கான குறைந்த கொழுப்பு உணவுகளுக்கான பரிந்துரையில் அவர்கள் நாளொன்றுக்கு 5 முறை பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்வதை 3 முறையாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்காக 18 நாடுகளிலிருந்து சுமார் 135,000 நபர்களின் ஆரோக்கியத் தரவ்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. 35-70 வயதிலான இவர்களது ஆரோக்கியம் சுமார் ஏழரை ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளினால் மரண விகிதம் ஒப்பீட்டு அளவில் குறைவே என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது அதிக கொழுப்பு உணவு உட்கொள்பவர்களை விட குறைந்த கொழுப்பு உணவு உட்கொள்பவர்களுக்கே மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் ஐநா புரிதலுக்கு மாற்றான ஒரு முடிவை இந்த ஆய்வாளர்கள் எட்டியுள்ளனர்.
“வெகுஜன புரிதலுக்கு மாறாக, கொழுப்பு உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதில் மரண சாத்தியங்கள் குறைவு” என்று ஆய்வாளர் தேஹன் தெரிவித்தார்.
பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உள்ள "trans fats" பற்றி இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, காரணம் அது தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன என்றார் தேகன்.
பார்சிலோனாவில் நடைபெற்ற ஐரோப்பிய இருதயவியல் கூட்டத்தில் கட்டுரை வாசித்த இந்த ஆய்வாளர் 50-55% கார்போஹைட்ரேட்கள் மற்றும் 35% கொழ்ப்பு ஆகியவை அடங்கிய உணவு சிறந்த உணவுமுறையாகும் என்று கூறியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக சராசரி உணவுமுறையில் 61% கார்போஹைட்ரேட்கள், 23.5% நல்ல கொழுப்பு, 15% புரோட்டீன் ஆகிய சத்துக்கள் இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஆனால் சில நாடுகளில் ஸ்டார்ச் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதிலேயே சமச்சீரற்ற நிலை உள்லது, சீனா, தெற்காசியா, ஆப்பிரிகாவில் முறையே ஸ்டார்ச் உணவுகள் எடுத்துக் கொள்ளும் விகிதம் முறையே 67, 65 மற்றும் 63% ஆகும்.
ஆய்வு மேற்கொண்ட 135,000 நபர்களில் பெரும்பாலோனோர் ஏழைநாடுகளைச் சேர்ந்தவர்கள், இவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் 70% கார்போஹைட்ரேட்களே உள்ளன.
ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை அடியொற்றி பெரும்பாலான ‘உணவுப்பழக்கம் - நோய்’ தொடர்புகள் அணுகப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தக் கண்டுபிடிப்புகள் அத்தகைய அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்துவதாகும்.
ஆனால் இந்த ஆய்வில் பங்கேற்காத ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியை சூசன் ஜெப் கூறும்போது, அதிக கார்போஹைட்ரேட் உணவுகளுக்கும் அதனால் விளையும் மரணங்களுக்குமான தொடர்பு பெரும்பாலும் இருதய நோய் அல்லாதவற்றிலிருந்தே ஏற்படுகிறது. இந்த ஆய்வு இதை விளக்கவில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago