ஐ.நா. பொருளாதார தடையால் அணுஆயுத சோதனையை தடுக்க முடியாது: வடகொரியா மீண்டும் மிரட்டல்

By ஏஎஃப்பி

ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைக்கு வடகொரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன்மூலம் அணுஆயுத சோதனை நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்று மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.

சர்வதேச சட்டதிட்டங்கள், ஒப்பந்தங்கள், ஐ.நா.வின் விதிகள் எல்லாவற்றையும் மீறி அணுஆயுத சோதனை நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. அத்துடன் அதிநவீன ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் ஏவுகணையை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தியது.

அண்டை நாடான தென் கொரியாவையும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க ஐ.நா.வில் அமெரிக்கா ஒரு புது தீர்மானம் கொண்டு வந்தது. அந்தத் தீர்மானத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கின. இதன் மூலம் வடகொரியாவுக்கு ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வடகொரியா அரசின் கொரியா சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி மூலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐ.நா.வின் புதிய பொருளாதார தடை, வடகொரிய நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்டுள்ள வன்முறையாகும். இந்தத் தடையால் எங்கள் நாட்டின் அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது. அமெரிக்கா எங்களை மிரட்டி வந்தாலும், நாங்கள் அணுஆயுதம் தொடர்பான விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முன்வர மாட்டோம்.

அமெரிக்கா எங்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுத சோதனை நடவடிக்கைகள் விவகாரத்தை பேச்சுவார்த்தை முன் வைக்க முடியாது. எங்கள் அணு ஆயுதங்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் இருந்து ஒரு அடி கூட பின்வைக்க மாட்டோம்.

இவ்வாறு வடகொரிய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறும்போது, ‘‘உலக நாடுகள் பொறுமை இழந்துவிட்டன என்பதையே பொருளாதார தடை வெளிப்படுத்தி உள்ளது. வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் முன்வரும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

23 hours ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்