வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெறி பிடித்தவர்: பிலிப்பைன்ஸ் அதிபர்

By ஏஎஃப்பி

வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன் வெறி பிடித்தவர் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் கூறியுள்ளார்.

பிராந்திய உச்சி மாநாட்டுக்கு முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிலிப்பைன்ஸ் அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து டியுடெர்ட் கூறும்போது, “வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு வெறிப்பிடித்தவர். அவரின் அணுஆயுத சோதனைகள் ஆசியாவை அழிக்க போகிறது. அழகான முகத்தையுடைய கிம் ஆபத்தான பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருக்கிறார். இந்த இந்த அணுசக்தி யுத்தம் முடிவுக்கு வர வேண்டும். ஏனென்றால் இந்த அழிவால் மண் வளங்கள் வீழ்ச்சியடையும். இதனால் நாம் எதையும் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை சோதனைகளால் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றன. அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளையும் வடகொரியா மீது விதித்துள்ளது.

எனினும் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

1 day ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்