வடகொரியாவின் ஏவுகணை வளர்ச்சி அச்சுறுத்தலில் புதிய நிலை என்று ஜப்பான் கூறியுள்ளது.
இதுகுறித்து ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்யன்று வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில், “ஏவுகணை சோதனையில் வடகொரியாவின் வளர்ச்சி அச்சுறுத்தலின் புதிய நிலையாக உலக நாடுகளிடையே உருவாகியுள்ளது. வடகொரியா தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடல்களுக்கு இடையே ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது என்பது மிகப் பெரிய அச்சுறுத்தல்தான். மேலும் ஏவுகணை சோதனை தொழில் நூட்பத்தில் வடகொரியா மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் தலைமையில் அந்நாடு முன்னேற்ற கண்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச சட்டதிட்டங்கள், ஒப்பந்தங்கள், ஐ.நா.வின் விதிகள் எல்லாவற்றையும் மீறி அணுஆயுத சோதனை நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. அத்துடன் அதிநவீன ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் ஏவுகணையை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை கொண்டு வந்தது. இதற்கு கடந்த சனிக்கிழமை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கின.
ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைக்கு வடகொரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்த பொருளாதார தடையினால் வடகொரியாவின் அணுஆயுத சோதனை நடவடிக்கைகளை தடுக்க முடியாது என அ ந்நாடு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
1 day ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago